சுங்கை லாருட் ஆற்றோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலம்!
- Muthu Kumar
- 04 Oct, 2024
தைப்பிங், அக்.4-
ஒரு பெண் குழந்தையின் சடலம் சிம்பாங் சுங்கை லாருட் ஆற்றோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த புதன்கிழமை பிறந்த இக்குழந்தை பிறந்தவுடன் வீசப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தைப்பிங் மருத்துவமனையிலிருந்து நேற்று அதிகாலை 3.32 மணிக்குப் புகார் பெற்று, ஓர் அந்நிய பெண் மற்றும் அந்நிய ஆடவர் கைது செய்யப்பட்டதில் இக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்பலமானதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நாசிர் இஸ்மாயில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட கம்போடிய பெண் அப்போதுதான் குழந்தை பெற்றெடுத்து அவசர சிகிச்சை பெற்ற நிலையில் சுய நினைவுடன் காணப்பட்டார். அப்பெண் தன் குழந்தை இறந்து விட்டதாகக் கூறினார். குழந்தையை அவர் தன்னுடன் கொண்டு வரவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட தொடக்ககட்ட விசாரணைப்படி புதிதாகப் பெற்றெடுக்கப்பட்ட அக்குழந்தை வீசப்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 34 வயதுடைய ஒரு நேபாளிய ஆடவனை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து இக்குழந்தை வீசப்பட்ட இடம் தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பில் 318ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டதாக ஓர் அறிக்கையில் ஏசிபி முகமட் நாசிர் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *