ரொனால்டோவின் அதிரடி 'பைசிகள் கிக்'

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

ரியாத், நவ, 24-

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனது பழைய அபார ஆட்டத்தைக் களத்தில் காட்டினார். சவுதி புரோ லீக் போட்டியில் கூடுதல் நேரத்தில் அசத்தலான 'பைசிகள் கிக்' மூலம், அல் நாஸரை 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜுக்கு எதிராக வெற்றி பெற வைத்தார்.

முதல் பாதியில் அல் நாஸ்ர் 2-0 என்று முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் பாதியில் அல் கலீஜ் ஒரு கோல் திரும்பப் பெற்றது. போட்டி 3-1 என்ற நிலையில் நிறைவு பெறும் என்று ரசிகர்கள் நினைத்த தருணத்தில், 93-ஆவது நிமிடத்தில் ரொனால்டோவின் அதிரடி வந்தது.

வலது ஓரத்தில் இருந்து உயரமாக வந்த கிராஸை, தலையைத் தாண்டி பின்னால் பறந்து கொண்டே பைசிகள் கிக் அடித்து கோலாக்கினார் ரொனால்டோ. இதைக் கண்டு மைதானமே அதிர்ந்தது, சமூக வலைதளங்களில் அந்த கோல் வைரலானது. இது ரொனால்டோவின் சவுதி லீக் சீசனில் 15-ஆவது கோல் ஆகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *