அர்சனலை வென்றது மென்செஸ்டர் யுனைடெட்

top-news

லண்டன், ஜன. 26-

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) பட்டத்தை நோக்கி முன்னேறி வந்த அர்சனல் அணியின் பயணத்திற்கு, மான்செஸ்டர் யுனைடெட் கடும் அதிர்ச்சியளித்துள்ளது. எமிரேட்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், யுனைடெட் 3-2 என்ற கணக்கில் ஆர்சனலை வீழ்த்தியது. இந்த வெற்றியை உறுதி செய்தவர் பிரேசில் தாக்குதல் ஆட்டக்காரர் மாதியுஸ் குன்யா ஆவார்.

போட்டியின் தொடக்கத்திலேயே, யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர்  லிசாண்ட்ரோ மார்டினெஸ் தவறுதலாகத்  தனது கோல்போஸ்டுக்குள் பந்தை அனுப்பியதால், அர்சனல் முன்னிலை பெற்றது.  ஆனால் இடைவேளைக்கு முன், பிரையன் எம்பியுமோ சமநிலை கோல் அடித்து யுனைடெட்டை மீண்டும் ஆட்டத்தில் கொண்டு வந்தார்.

இடைவேளைக்குப் பிறகு, பேட்ரிக் டோர்கு சக்திவாய்ந்த ஷாட்டை அடித்து, யுனைடெட்டை முதல் முறையாக முன்னிலையில் நிறுத்தினார். போட்டி யுனைடெட்டின் கட்டுப்பாட்டில் சென்றதாகத் தோன்றிய நிலையில், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மைக்கேல் மெரினோ சமநிலை கோல் அடித்து, அர்சனலுக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஆனால் முடிவில், ஆட்டம் முடிவடைய மூன்று நிமிடங்கள் இருக்கும் போது, மாதியுஸ் குன்யா பாய்ச்சிய துல்லியமான, சக்திவாய்ந்த ஷாட் வலையில் பாய்ந்து, யுனைடெட்டுக்கு மறக்க முடியாத வெற்றியைத் தேடித் தந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *