லிவர்புல் மீண்டும் வெற்றி! இசாக் முதல் பிரீமியர் லீக் கோல் அடித்து சாதனை

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

லண்டன், டிச. 1-

லிவர்புல் அணியின் புது இளம் முன்கள ஆட்டக்காரர் அலெக்சாண்டர் இசாக், வெஸ்ட் ஹாம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போட்டியில் தனது முதல் பிரீமியர் லீக் கோலை அடித்து அபார சாதனை படைத்தார். இந்த வெற்றி, லிவர்புல் அணியின் சமீபத்திய மோசமான ஓட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

செப்டம்பர் மாதம் நியூகாசலிருந்து 125 மில்லியன் பவுண்டுகளுக்கு (RM686 மில்லியன்) லிவர்புலுக்கு இடம்பெயர்ந்த இசாக், ஐந்து போட்டிகளில் கோல் அடிக்கத் தவறியிருந்தார். லீக் கோப்பை போட்டியில் ஒரேயொரு கோல் அடித்திருந்த அவர், லண்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 60-ஆவது நிமிடத்தில் அழகிய கோலை அடித்தார். இதன் மூலம் அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார்.

அர்னே ஸ்லாட் தலைமையிலான லிவர்புல் அணி, 12 போட்டிகளில் 9 தோல்விகளைத் தாங்கிய நிலையில் இந்த வெற்றியால் பெரும் நிவாரணம் அடைந்தது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் கோடி காக்போ 2-ஆவது கோலை அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் லிவர்புல் அணி பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 8-ஆவது இடத்தைப் பிடித்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *