தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மாணவர்களுக்கான தங்கப் பதக்கப் பணி தொடரும் – ஓம்ஸ் பா. தியாகராஜன்

top-news

கோலாலம்பூர், நவ. 24-

தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தாலும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் தங்கப் பதக்க விருது வழங்கும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் உறுதியளித்தார்.

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற 19-ஆவது தங்கப் பதக்க விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், இவ்விழாவின் முக்கிய நோக்கம் மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கௌரவிப்பதுடன், அவர்களின் வெற்றிக்காகப் பல தியாகங்களைச் செய்த பெற்றோருக்கு பொதுமேடையில் நன்றி தெரிவிப்பதாகும் என்றார்.

மாணவர்கள் தங்களது பெற்றோரின் உழைப்பையும் தியாகத்தையும் உணர்ந்து, அனைவரின் முன்னிலையிலும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதே இவ்விழாவின் தனிச்சிறப்பு என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்விழா தொடங்கியபோது ஒரு கிராம் தங்கத்தின் விலை 87 வெள்ளியாக இருந்த நிலையில், தற்போது 532 வெள்ளியாக உயர்ந்துள்ள போதிலும், இத்திட்டம் கைவிடப்படாது என்றார்.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 500-ஆக உயர்த்துவதே இலக்கு என்றும், இதற்கு மேலும் பல மாணவர்கள் இந்திய ஆய்வியல் துறையில் இணைந்து பயில வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் வெற்றிக்குப் பங்களித்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்த அவர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலே மாணவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும் வலியுறுத்தினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்