பிரான்சில் டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை
- Surendran Sumdraraj
- 08 Oct, 2026
பாரீஸ், அக். 8: பிரான்சின் ஸ்டிராஸ்போர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சித்தரிக்கும் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அரசியல் மற்றும் பருவநிலை மாற்ற விவாதங்களை மையமாகக் கொண்ட கலைப் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 2.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்கியாட் வடிவமைத்துள்ளார். சிலையில், நீண்ட தங்கத் தடியை கையில் பிடித்தபடி, உயரம் குறைந்த மனிதர் ஒருவரின் தோள்மீது டிரம்ப் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு 23 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும், அது “அநீதியின் அரசன்” என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமையால் பாதிக்கப்பட்ட மனிதரின் தோள்மீது அதிகாரம் கொண்டவர் அமர்ந்திருப்பதை குறிக்கும் வகையில் இந்த கலைப் படைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு டிரம்ப் தடையாக செயல்படுகிறார் என்பது தனது கலைப்படைப்பின் பின்னணிக் கருத்து என அந்த கலைஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

