பேரனின் பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சி – இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 14:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வியை நிறைவு செய்துள்ளார்.

இன்பநிதியின் பட்டமளிப்பு விழா மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், பட்டம் பெற்ற தனது பேரனை மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் துர்கா ஸ்டாலினும் விழாவில் பங்கேற்று இன்பநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதேபோன்று, தந்தை உதயநிதி ஸ்டாலினும் தனது மகன் இன்பநிதியை அரவணைத்து வாழ்த்தினார். குடும்பத்தினர் ஒன்றாகப் பங்கேற்ற இந்தப் பட்டமளிப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கடந்த 4ஆம் தேதி சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். இங்கிலாந்தில் தங்கியிருக்கும் அவர், அங்கு நடைபெறும் மேலும் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவை முடித்த பின்னர், ஜூலை 18ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *