கிரீலிஷின் அபார கோல்! எவர்டன் போர்ன்மவுத்தை 1-0 வெற்றி

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

இங்கிலாந்து, டிச. 3-

எவர்டனின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜாக் கிரீலிஷ் இந்த சீசனில் பிரீமியர் லீக் போட்டியில் எவர்டனுக்காக அடித்த இரண்டாவது கோல், போர்ன்மவுத் மைதானத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் முக்கியமான வெற்றியைத் தேடித் தந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் தங்கள் சொந்த மைதானத்தில் தோல்வியே காணாத போர்ன்மவுத்தின் அசைக்க முடியாத சாதனை முறியடிக்கப்பட்டது. கடந்த நான்கு லீக் போட்டிகளில் இது எவர்டனின் மூன்றாவது வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், போர்ன்மவுத் மைதானத்தில் எவர்டனுக்கு இதுவே முதல் பிரீமியர் லீக் வெற்றி.

14 போட்டிகளில் 21 புள்ளிகளுடன் எவர்டன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது. போர்ன்மவுத் 19 புள்ளிகளுடன் 14-ஆவது இடத்தில் உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *