இஸ்ரோவின் மற்றுமொரு சாதனை: “நாட்டுக்கு பெருமைக்குரிய தருணம்” – பிரதமர் மோடி புகழாரம்
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
ஸ்ரீஹரிகோட்டா, செப். 4 –
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, தனது ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களுக்குப் பிறகு, ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், இது இஸ்ரோவின் மற்றுமொரு மிகச்சிறந்த சாதனை என்றும், இந்தியாவுக்குப் பெருமைக்குரிய தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



