குவா மூசாங்கில் விபத்து – ஒருவர் பலி; மூவர் காயம்!

top-news
FREE WEBSITE AD


ஜாலான் குவா முசாங்- கோல கிராய் சாலை Km75 இல் இன்று இரண்டு கார்கள் மோதியதில் 55 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் காயமடைந்தனர். இதில் மைமூனா முகமட் என்ற அந்த மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நள்ளிரவு 1 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் கார் கோலா கிராயிலிருந்து குவா முசாங்கிற்குச் சென்று கொண்டிருந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார். காயமடைந்தவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பயணி என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவரின் 22 வயது மகன் தனது ஹோண்டா சிஆர்வியின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்த பாதையில் சென்று எதிர்திசையில் பயணித்த வோக்ஸ்வேகன் கோல்ஃப் மீது மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *