உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிந்தரோவை எதிர்கொள்ள தயாராகும் குகேஷ்
- Surendran Sumdraraj
- 29 Jul, 2026
ஜெனீவா, ஜூலை 29-
நடப்பு உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொள்ள உள்ளார். இந்தப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) அறிவித்துள்ளது.
20 வயதான குகேஷ், உலக செஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரராக சாதனை படைத்துள்ளார். மறுபுறம், கேண்டிடேட்ஸ் தொடரில் தோல்வியறியாமல் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள சிந்தரோவும் 20 வயதுடையவரே. இதனால், உலக செஸ் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதுடைய இரு வீரர்கள் மோதும் சாம்பியன்ஷிப் போட்டியாக இது பதிவாக உள்ளது.
வரும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 14 கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். உலகம் முழுவதும் உள்ள செஸ் ரசிகர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



