கயானா படகு விபத்து: 27 பேரின் உடல்கள் மீட்பு, 83 பேரை தேடும் பணி தீவிரம்

top-news
FREE WEBSITE AD

கயானா, ஜூலை 21-

தென் அமெரிக்க நாடான கயானாவில் கடலில் கவிழ்ந்த எம்.வி. பாரிமா (MV Barima) பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 83 பேரை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து கயானாவின் அண்மைக் காலங்களில் நிகழ்ந்த மிக மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஜார்ஜ்டவுனில் இருந்து போர்ட் கெய்டுமா நோக்கி சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. விபத்து நேரத்தில் படகில் பயணித்த 69 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பயணிகள் பட்டியலில் முறைகேடுகள் இருந்ததாகவும், உண்மையில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமானோர் பயணம் செய்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக படகின் கேப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பரிசோதனையில் கேப்டன் மற்றும் ஒரு பணியாளர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *