ஹாலண்ட் புதிய சாதனை படைத்தார்!
- Tamil Malar (Reporter)
- 03 Dec, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
லண்டன், டிச. 3-
மான்செஸ்டர் சிட்டியின் நோர்வே நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட், இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். புல்ஹாமை 5-4 என்ற வீழ்த்திய ஆட்டத்தில் ஹாலண்ட் ஒரு கோல் அடித்து, வெறும் 111 லீக் போட்டிகளிலேயே 100 கோல்களை எட்டினார். இதன் மூலம் அவர் பிரீமியர் லீகில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இதற்கு முன்பு இந்த சாதனை நியூகாஸில், பிளாக்பர்ன் ஜாம்பவான் அலன் ஷியரரிடம் இருந்தது. ஷியரர் 124 போட்டிகளில் 100 கோல்களை எட்டினார். ஹாலண்ட் அதை 13 போட்டிகள் முன்னதாகவே முறியடித்தார்.
கிரேவன் காட்டேஜ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ஹாலண்ட் முதல் பாதியிலேயே கோல் அடித்து சாதனையைப் பதிவு செய்தார். அதன்பிறகு பில் போடன் இரண்டு கோல்கள் உள்பட சிட்டி 5-1 என்று முன்னிலை பெற்றது. ஆனால் புல்ஹாம் கடைசி நிமிடங்களில் திரும்பி அடித்து 5-4 என்று போட்டியை இறுதிவரை பரபரப்பாக்கியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



