மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா!இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

top-news

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி. முதல் நாளே சிக்சர் அடித்த விஜய் சேதுபதி ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளினார். இந்த வார வீக் எண்ட் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங். இந்நிலையில் இந்த முறை பிக் பாஸ் ஷோவில் அதிரடி திருப்பமாக 24 மணி நேர எவிக்‌ஷன் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டில் எவிக்‌ஷன் நாமினேஷன் நடந்தது. அதில் அதிக வாக்குகள் பெற்று சாச்சனா சக ஹவுஸ்மேட்ஸ்களால் எமினேட் செய்யப்பட்டார். கண்ணீருடன் சாச்சனா வெளியேறிய காட்சிகள் ரசிகர்களை கலங்க வைத்தது. 21 வயதில் நிறைய கனவுகளுடன் வந்த சின்ன பெண்ணை இப்படி ஒரே நாளில் வெளியேற்றியதை ரசிகர்கள் பெரிதும் விமர்சித்தனர். இந்த வார வீக் எண்ட் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இதுக் குறித்து பேசுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்க,  பிக் பாஸ் வீட்டில் ஒரு ட்விஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில் சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார். சாச்சனாவின் ரீ எண்ட்ரியை பார்த்து சக ஹவுஸ்மேட்ஸ்கள் ஷாக் ஆகுகின்றனர். 4 நாட்கள் வெளியில் இருந்து நிகழ்சியை பார்த்த சாச்சனா, யார் மிகவும் மோசமாக பிக் பாஸ் கேம்மை விளையாடிகின்றனர் என பேசுகிறார். அதில் அவர் ரவீந்தர், ரஞ்சித், சத்யா பெயரை குறிப்பிடுகிறார்.அடுத்து சாச்சனாவின் ஆட்டம் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *