ஹாடி அவாங் கட்டுரை விவகாரம்: காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் – பாஸ்
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
கோத்தா பாரு, ஆக 24-
பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாக காவல்துறை நடத்தும் விசாரணையைத் தொடர்ந்து, அதிகாரிகள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள பாஸ் கட்சி தயாராக உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் உட்பட, கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் அல்லது எழுத்துக்கள் குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களைக் காவல்துறை விசாரணைக்கு அழைப்பது இயல்பானது என்று அவர் கூறினார்.
"வழக்கமாக, எங்கள் அறிக்கைகள் தொடர்பான காவல்துறை புகார்கள் வரும்போதெல்லாம், நாங்கள் அழைக்கப்படுவோம்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாடி உட்பட சில தரப்பினர் அழைக்கப்படலாம் என்றும், பாஸ் கட்சி அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



