உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் 10 வது இடத்தில் உள்ளார்!

top-news

உலகின் மிக அழகான நடிகர்கள் குறித்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தயாரித்த பட்டியல் சமீபத்தில் வெளிவந்துள்ளது.இதன்படி பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் பத்தாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக அறியப்பட்டவர் ஷாருக்.

ஷாருக்கான் திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமின்றி தனது அழகாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வருடம் இவர் நடித்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தன என்றால் அவர் மேல் ரசிகர்கள் மத்தியில் உள்ள கிரேஸை புரிந்து கொள்ளலாம்.

மேலும் சமீபத்தில் உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் ஷாருக் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வா அறிவியல் ஆய்வு மூலம் மிகவும் அழகான நடிகர்களின் பட்டியலை உருவாக்கினார். இதில், ஷாருக்கான் 86.76 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

கிரேக்க கோல்டன் ரேஷியோ ஆஃப் பியூட்டியின் படி இந்த ஆய்வில் நடிகர்களின் முக அழகு மதிப்பிடப்பட்டது. கலாநிதி ஜூலியன் டி சில்வா தனது ஃபேஸ் மேப்பிங் சாப்ட்வேர் மூலம் எத்தனை நடிகர்களின் முகம் இந்த கோல்டன் ரேஷியோவுக்கு அருகில் இருக்கிறது என்ற மதிப்பீட்டிற்கு வந்தார்.

இந்தப் பட்டியலில் ஆரோன் டெய்லர் ஜான்சன் முதல் இடத்தில் உள்ளார். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர். 1996 முதல் திரையுலகில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக பிரித்தானிய நடிகரான லூசியன் லாவிஸ்கவுண்ட் மூன்றாவது இடத்தில் ஐரிஷ் நடிகர் பால் மெஸ்கல் உள்ளார்.

ராபர்ட் பாட்டின்சன், ஜாக் லௌடன், ஜார்ஜ் குளூனி, நிக்கோலஸ் ஹோல்ட், சார்லஸ் மெல்டன் மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் பின்வரும் நிலைகளில் உள்ளனர். இந்த டாப் 10 மிக அழகான நடிகர்கள் பட்டியல் ஷாருக்கான் பத்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானை ரசிகர்கள் எஸ்.ஆர்.கே என்று செல்லமாக அழைக்கிறார்கள். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார், உலக நாடுகளில் இந்தியாவின் அடையாளம். இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 14 ஃபிலிம் ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். சினிமாத்துறையில் இவரது சாதனைகளை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்துள்ளது. உலகளவில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலான இவரது படங்கள் இந்திய தேசத்தின் அடையாளத்தை கொண்டவை.

1980களின் துவக்கத்தில் சின்னத்திரை சீரியல்களில் தனது நடிப்பு பயணத்தை துவங்கினார். 1992ம் ஆண்டு தீவானா படத்தின் மூலம் பெரிய திரையில் தோன்றி இன்று பாலிவுட்டின் முக்கிய நடிகராகவும், உலகளவில் புகழ்பெற்றவராகவும் உள்ளார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் ரொமான்டிக்காக இவர் நடித்த தில்வாலே துல்ஹனியா லஜாயேங்கே என்ற படம் தென்னிந்தியா வரை இவரது புகழை கொண்டு சேர்த்தது. அடுத்து 1998ம் ஆண்டு இவர் நடித்த குச்குச்ஹோட்டா ஹே திரைப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்து இவருக்கு புகழ் சேர்த்தது. தொடர்ந்து கல்ஹோனா ஹோ, வீர் சாரா, தேவ்தாஸ், ஸ்வதேஷ், சக்தே இந்தியா ஆகிய படங்கள் இவருக்கு இந்தியா மற்றும் உலகளவில் ரசிகர்களை கொண்டு வந்தது. ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களும் இவர் படங்களில் குறிப்பிடத்தக்கவை.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *