ஷாலினி அஜித் மற்றும் ஆத்விக் பாசத்தால் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில் மிகவும் பிரபலமான அனைவரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அருமையான ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி.

அஜித் - ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அஜித்தின் கையை பற்றிக்கொண்டு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து 'லவ் யூ ஃபார் எவர்' என கேப்ஷனிட்டுள்ளார். ஷாலினி விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை ஷாலினிக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால், முக்கியமான அறுவை சிகிச்சை  என்று கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஷாலினி வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது.

தன்னுடைய மகன் ஆத்விக், தனக்கு நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஷாலினி. இதுவரை மகனின் புகைப்படங்கள் கணவரின் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷாலினி, முதல் முறையாக மகன் தனக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் அழகான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *