WTA பெண்கள் டென்னிஸ் தொடரில் ஜாங் கின்வென் அரையிறுதிக்கு தகுதி !

top-news

ரியாத்:

உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

இதில் 'பர்பிள்' பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான ஜாங் கின்வென் (சீனா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) எதிர்த்து விளையாடி 2-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

ஒரு வெற்றி, 2 தோல்வியை சந்தித்த ஜாஸ்மின் பாவ்லினி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *