சினிமா பற்றி பல பாடங்களை சொன்ன மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி- ஷாருக்கான்!

top-news

ஐந்து ஆண்டுகளாக ஷாருக்கானுக்கு சினிமாவில் பெரியளவிலான வெற்றிக் கிடைக்கவில்லை. ஆனால், கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான `பதான்', `ஜவான்', `டங்கி' என மூன்று திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டடித்திருந்தது.

இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான `IIFA' விருது விழா நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது `ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் வழங்கினர். இயக்குநர் மணிரத்னம் மேடையில் ஏறியதும் அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார், ஷாருக். இதுமட்டுமல்ல இந்த விருது விழா முழுவதையும் விக்கி கெளஷல், கரண் ஜோகர் ஆகியோருடன் அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடன் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஷாருக்கான்.

தொடர்ந்து மேடையில் பேசிய ஷாருக்கான் எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத்திற்கும் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானுக்கும் நன்றி. விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் நான் விருதுகளுக்கு பேராசைப்படுவேன். இந்த விருது எனக்கு மிகவும் தனிப்பட்டது.

என்னுடன் இந்த பிரிவுக்கு தேர்வாகி  இருந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்ரந் மாசி, விக்கி கெளஷல், சன்னி தியோல் ஆகியோருக்கும் வாழ்த்துகள். அனைவரும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்தான்." என பேசியிருக்கிறார் ஷாருக்கான்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *