மன்னிப்பை ஏற்றுக்கொண்ட.... சிலாங்கூர் சுல்தானுக்கு நன்றி!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், செப் 27: கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிலாங்கூர் சுல்தான் குறித்து கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நோர்  பேசிய பேச்சு சர்ச்சையானதை அடுத்து, இவ்விவகாரம் சுல்தான் பார்வைக்கும் சென்றது. இதனை அடுத்து தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக சனூசி  சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவுக்கு கடிதம் வழி தெரிவித்தான்.

இந்நிலையில் சனூசியின் மன்னிப்பை சுல்தான் ஏற்றுக்கொண்டதை அடுத்து சனூசி சுல்தானுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சுல்தான் ஷராஃபுதீனின் மன்னிப்பும் கனிவான குணமும் அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதோடு சுல்தானின் இறையாண்மையையும் சிலாங்கூரின் செழுமையையும் மேலும் உயர்த்த வேண்டும் என்றும் சனுசி பிரார்த்தனை செய்தார்.

 நேற்று, சுல்தான் ஷராஃபுதீன், சனுசியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதோடு, அதீத உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும், மக்களிடம், குறிப்பாக சிலாங்கூரில் பேசும்போது பொருத்தமான மொழியைப் பயன்படுத்தவும் அவருக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *