தேசிய தின விழாவில் குப்பைகளைப் பொறுப்புடன் அகற்ற ஹன்னா இயோ வலியுறுத்து
- Surendran Sumdraraj
- 01 Aug, 2026
புத்ராஜெயா, ஆக. 1-
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணும் வகையில் குப்பைகளை கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என்று பிரதமர் துறையின் (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்ட குப்பைக் குவியல் போன்ற நிலை தேசிய தினக் கொண்டாட்டத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்பதே அரசின் விருப்பம் என அவர் தெரிவித்தார்.
தூய்மையைப் பேணுவது என்பது புத்ராஜெயா கழகத்தின் (PPj) பொறுப்பு மட்டுமல்ல, நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பும் ஆகும் என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார். தேசிய தினம் என்பது நாட்டின் ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் பொது ஒழுங்கை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக இருப்பதால், அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

