செல்லமாக மகனை கிண்டல் செய்த தனுஷ்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் தனுஷ் தனது மகன் லிங்காவை இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் கிண்டல் செய்தது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். நடிகை நித்யாமேனன், சமுத்திரக்கனி, அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே என பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த பலருடன் தனுஷின் இளைய மகன் லிங்காவும் கலந்துகொண்டு இருந்தார்.இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன் என்பதால் இவர் தனுஷ், ரஜினி என இவர்களது விழாவுக்கு தவறாமல் சென்றுவிடுவார்.

ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழாவுக்கும் வந்திருந்த லிங்கா தனது மொபைலில் ரஜினியின் பேச்சுகளை விடியோ எடுத்துகொண்டு இருப்பார்.இந்நிலையில், இட்லி கடை விழாவில் அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். தனுஷ் மேடையில், "என்ன லிங்கா? என்னையெல்லாம் விடியோ எடுக்க மாட்டியா?" எனக் கேட்பார். அதற்கு லிங்கா வெட்கத்தில் சிரித்துக்கொண்டே தலையைக் குனிந்து கொள்வார்.

தனுஷ் இன்னொரு முறை ஃபங்க் ஹேர் ஸ்டைல் குறித்து பேசும்போதும் லிங்கா வெட்கத்தில் சிரித்தார்.பின்னர், லிங்கா தனது தந்தை தனுஷுடன் சேர்ந்து மேடையில் நடனம் ஆடியதும் குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *