முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது இன்று குற்றச்சாட்டு பதிவு!

top-news

கோலாலம்பூர், ஆக 7: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நீதிமன்றத்தின் மின்னணு வழக்குப்பதிவு முறைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி,  அம்னோ முன்னாள் உதவித் தலைவருமான அவர் மீது இன்று காலை  நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு, பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மயிலின் சொத்து விவரங்கள் தொடர்பானது எனக் கூறப்படுகிறது.
இஸ்மாயில் இதற்கு முன்னர் ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார், மேலும் கடந்த ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் பல சுற்று விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இந்த ஊழல் தடுப்பு அமைப்பு தனது விசாரணையை ஜூன் 2025-ல் நிறைவு செய்தது.

நான்கு நபர்களின் இல்லங்கள் மற்றும் "பாதுகாப்பான வீடுகள்" என்று நம்பப்படும் மூன்று பிற வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் மற்றும் பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்திருந்தது.

ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை அவர் பிரதமராக இருந்த காலத்தில், கெலுவார்கா மலேசியா முன்முயற்சியின் கீழ், விளம்பர மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நிதி செலவினம் மற்றும் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *