'கெங் சூரியா' குற்றக் கும்பலைச் சேர்ந்த 9 ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

top-news

சுங்கை பட்டாணி, அக். 22: 'கெங் சூரியா' (Geng Suria) எனப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பலில் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாக ஒன்பது ஆடவர்கள் மீது இன்று சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதிகள் நபிஷா இப்ராஹிம் மற்றும் நஜ்வா சே மாட் ஆகியோர் முன்னிலையில் தனித்தனி நீதிமன்ற அறைகளில் ஒன்பது பேருக்கும் தமிழில் குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிகையின்படி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், சுங்கை பட்டாணி, பெக்கான் லாமா, ஜாலான் செக்கராட்டில் உள்ள வீட்டு எண் குறிப்பிடப்படாத ஒரு வீட்டில், திட்டமிட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களாக இவர்கள் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 130V(1) பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இச்சட்டப்பிரிவு வகை செய்கிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *