உலக பிபா தரவரிசையில் 116-ஆவது இடத்திற்கு மலேசியா முன்னேற்றம்!

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 20-

மலேசிய தேசிய கால்பந்து அணி (ஹரிமாவ் மலாயா) உலக பிபா தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி, இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய பட்டியலில் 116-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய அக்டோபர் 17 அன்றைய தரவரிசையில் 118-ஆவது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அந்நாடு ஒரு இடம் முன்னேறி 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வியட்நாம் ஒரு இடம் உயர்ந்து 110-ஆவது இடத்தில் இருந்து பிராந்தியத்தின் இரண்டாவது சிறந்த அணியாகத் திகழ்கிறது.

மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் மூன்றாவது இடத்தையும், இந்தோனேசியா நான்காவது இடத்தையும் தக்கவைத்துள்ளன. பிலிப்பைன்ஸ் 136-ஆவது இடத்திற்கு முன்னேறி, தென் கிழக்கு ஆசியாவில் ஐந்தாவது சிறந்த அணியாக உயர்ந்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *