ஹரிமாவ் மலாயா அணி பாலஸ்தீனத்தை 1-0 கோல்கணக்கில் வென்றது
- Tamil Malar (Reporter)
- 09 Sep, 2025
கோலாலம்பூர், செப். 10-
செய்தி-வெற்றி மைந்தன்
ஹரிமாவ் மலாயா அணி, உலக
தரவரிசையில் 98-ஆவது இடத்தில் உள்ள பாலஸ்தீன அணியை 1-0
என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த அனைத்துலக நட்பு ஆட்டம் இஸ்கண்டர் ஜொகூரில் உள்ள சுல்தான்
இப்ராஹிம் மைதானத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூருக்கு
எதிரான ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முதன்மை அணியில் பெரிய மாற்றங்களுடன்
களமிறங்கிய ஹரிமாவ்
மலாயா, ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே முன்னிலை
பெற்றது. ஜோவோ பிகுரெய்டோ, குவென்டின் செங் அளித்த
குறுக்குப் பந்தை கோலாக மாற்றினார்.
24-ஆவது
நிமிடத்தில் பிகுரெய்டோவுக்கு மற்றொரு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவரது கோல் முயற்சி பாலஸ்தீன கோல்கீப்பர் ரமி ஹமாதாவால்
தடுக்கப்பட்டது.
பாலஸ்தீன அணியும் 33-ஆவது நிமிடத்தில் பதர் மவுஸாவின்
மூலம் கோல் அடிக்க நெருக்கமாக முயற்சித்தது, ஆனால் மலேசிய
கோல்கீப்பர் அஹ்மத் சியாஹன் ஹாஸ்மி முகமதுவின் அற்புதமான பாதுகாப்பு முயற்சியால்
அது தடுக்கப்பட்டது.
ஆட்டம் தொடர்ந்து
விறுவிறுப்பாக நடைபெற்றது. 35-ஆவது நிமிடத்தில் மலேசியாவின் கேப்ரியல் பால்மேரோவின்
முயற்சி மற்றொரு முறை ஹமாதாவை பரபரப்பாக்கியது, ஆனால் அவரது
கோல் முயற்சியும் தடுக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



