அமெரிக்கா வெளியேறினால் என்ன? ட்ரம்புக்கு 'செக்' வைத்த கலிபோர்னியா! What if the US leaves? California puts a 'check' on Trump!
- Muthu Kumar
- 25 Jan, 2026
அமெரிக்கா வெளியேறலாம், ஆனால் கலிபோர்னியா ஒருபோதும் பின்வாங்காது” என அதிரடி காட்டியுள்ளது கலிபோர்னியா மாகாணம்.
உலக சுகாதார அமைப்பில் (WHO) தன்னிச்சையாக இணைந்த முதல் அமெரிக்க மாகாணம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து, அதிபர் ட்ரம்ப்பின் முடிவுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார் கவர்னர் கவின் நியூசம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்தது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. “அமெரிக்காவின் நிதி இனி சர்வதேச அமைப்புகளுக்கு கிடையாது” என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கலிபோர்னியா பகிரங்கமாக எதிர்த்துள்ளது.
உலக நாடுகளுடன் இணைந்து நோய்த்தொற்றுகளைக் கண்காணிக்கவும், புதிய வைரஸ்களை ஆரம்பத்திலேயே கண்டறியவும் WHO உருவாக்கியுள்ள ‘சர்வதேச நோய் தடுப்பு வலையமைப்பில்’ (International Pathogen Surveillance Network – IPSN) கலிபோர்னியா தற்போது இணைந்துள்ளது.
இதன் மூலம், சர்வதேச நாடுகளுடன் கலிபோர்னியா நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். புதிய வகை நோய்க்கிருமிகள் குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகளுடன் கைகோர்க்கும். மத்திய அரசின் (Federal Government) தடையையும் மீறி, மக்கள் நலனே முக்கியம் என ‘தனி ரூட்டில்’ களம் இறங்கியுள்ளது.
இந்த அதிரடி குறித்துப் பேசியுள்ள கலிபோர்னியா தரப்பு, “நோய்களுக்கு எல்லைகள் கிடையாது. அமெரிக்கா வெளியேறுவதால் கலிபோர்னியா மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அறிவியல் ரீதியாக உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்,” எனத் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கைக்கு எதிராக, கலிபோர்னியாவின் இந்த ‘குளோபல் பார்ட்னர்ஷிப்’ அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



