ஹாட்ரிக் நாயகன் ஜொனாதன் டேவிட்; கத்தாரை 6-0 என வீழ்த்திய கனடா

top-news
FREE WEBSITE AD

வான்கூவர், ஜூன் 19 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இணை நடத்தும் நாடான கனடா, கத்தாரை 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பை வெற்றியை பதிவு செய்தது.

குரூப் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் கனடா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக நட்சத்திர தாக்குதல் வீரர் ஜொனாதன் டேவிட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

தாக்குதல் மற்றும் பந்துக் கட்டுப்பாட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய கனடா, கத்தார் அணிக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் தொடர்ந்து கோல் மழை பொழிந்தது. கத்தார் தற்காப்பு வரிசை கனடாவின் வேகமான தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் கனடா தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், குரூப் ‘பி’ பிரிவில் சுவிட்சர்லாந்தை கோல் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *