காதலர் தினத்தில் இருந்து மகா கும்பமேளா புகழ் மோனோலிசா ஆட்டம் ஆரம்பம்!

top-news

கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா, சோஷியல் மீடியாவில் வேகமாக வைரல் ஆனார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.

இந்நிலையில் கேரளா மாநிலம் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் மோனலிசா கலந்து கொள்வதாக நகை கடை நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுருந்தது. இதையடுத்து மோனலிசாவை பார்ப்பதற்காக ஆவலுடன் கடை முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோனாலிசா இளஞ்சிவப்பு நிற
லெஹங்காவில் டான்ஸ் ஆட ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டிருக்கின்றனர். பின்னர் மேடையில் 'எல்லோரும் நல்லா இருக்கீங்களா' என்று மலையாளத்தில் பேச தொடங்கிய மோனாலிசா, என்னை எந்த அளவுக்கு மக்கள் போற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு நான் அவர்களின் ரசிகையாக இருப்பேன் என்று கூறி, அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *