மலாய் பெரும்பான்மையே மலேசிய அரசியலின் மையம்! - துவான் இப்ராஹிம்
- Shan Siva
- 03 Sep, 2026
கோலாலம்பூர், செப் 3 : அடுத்த பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த
வேண்டும் என்ற அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியின் கருத்தை பாஸ் கட்சி
ஏற்றுக்கொள்வதாக அதன் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று
தெரிவித்தார்.
நாட்டின்
நிச்சயமற்ற அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இது மக்களுக்கு ஆணையைத் திருப்பிக் கொடுத்து, ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க
அவர்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு
இறுதியில் நாடாளுமன்றம் தானாகவே கலைக்கப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக,
பிரதமர் அன்வார் இப்ராஹிம் GE16-ஐ முன்கூட்டியே நடத்த வேண்டும் என பாரிசான்
நேஷனலும் அம்னோவும் விரும்புவதாக இன்று முன்னதாக ஜாஹிட் கூறினார்.
GE16 தேர்தலுடன் ஒரே
நேரத்தில் பல மாநிலங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என்றும், இது தேர்தல் ஆணையத்திற்கான செலவுகளைக்
குறைக்கும் என்றும் துவான் இப்ராஹிம் கூறினார்.
நீண்டகால அரசியல்
சூழ்ச்சிகளால் மக்கள் சோர்வடைந்துள்ளதாலும், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாததாலும், 16வது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த
வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், அம்னோவை
ஒன்றிணைக்கும் பாஸ் கட்சியின் செயல்திட்டம் மலாய்க்காரர்களுக்கு மட்டுமல்ல,
அனைத்து மலேசியர்களுக்குமானது என்றும் துவான்
இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நாங்கள்
மலாய்க்காரர்களை மட்டும் ஒன்றிணைக்க முற்படவில்லை. இருப்பினும், மலாய் பெரும்பான்மையினரே மலேசிய அரசியலின்
மையமாகத் திகழ்கின்றனர் என்று அவர்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



