வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்ப முடக்கம் தொடரும்! – உள்துறை அமைச்சு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, அக் 21: வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டு விண்ணப்பங்களில் தற்போதைய முடக்கத்தை தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் சைபுடீன் நசுத்தியோ ன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை, செப்டம்பர் 15 நிலவரப்படி, அரசாங்கம் நிர்ணயித்த வரம்பை நெருங்குகிறது.

இதனால், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள் முடக்கம் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

நாட்டின் மொத்த பணியாளர்களில் 15% வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை பொருளாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய வெளிநாட்டு தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

உச்சவரம்பு நிர்ணயம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டுப் பணியாளர்களின் நுழைவை உள்துறை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று சைபுதீன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *