இலங்கையில் கனமழை, வெள்ளம்: 7 பேர் பலி
- Surendran Sumdraraj
- 05 Aug, 2026
கொழும்பு, ஆக. 5-
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் நாட்டின் மத்திய மலைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேயிலை பயிரிடப்படும் மலைப்பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இலங்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவலின்படி, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 3,500 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



