பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 109 பேர் பலி
- Surendran Sumdraraj
- 28 Jul, 2026
இஸ்லாமாபாத், ஜூலை 28-
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள் இடிந்து விழுதல், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



