'நீல அலை' அடுத்து 16-வது பொதுத் தேர்தலையும் தாக்கும்! - நோ ஒமார்
- Shan Siva
- 21 Jul, 2026
ஷா ஆலம், ஜூலை 21: நெகிரி செம்பிலானில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையே ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு, ஒரு அரசியல் அலையை உருவாக்கி, அது சிலாங்கூருக்கும் பரவி, இறுதியில் 16வது பொதுத் தேர்தலில் புத்ராஜயாவைக் கைப்பற்ற இரு கூட்டணிகளுக்கும் உதவும் என சிலாங்கூர் அம்னோ முன்னாள் தலைவர் நோ ஓமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அம்னோ மற்றும் பாஸ் வேட்பாளர்களுக்கு இடையே நேரடி மோதல்களைத் தவிர்க்கும் இந்த ஏற்பாடு, மலாய் பெரும்பான்மைத் தொகுதிகளில் இரு கட்சிகளுக்குமான ஆதரவை வலுப்படுத்தும் என்று அம்னோ முன்னாள் உச்ச மன்ற உறுப்பினர் கூறினார்.
'நீல அலை' ஜொகூரில் தொடங்கி இப்போது நெகிரி செம்பிலானை நோக்கி நகர்கிறது. இந்த சூத்திரம் சிலாங்கூரிலும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இன்ஷா அல்லாஹ், 16வது பொதுத் தேர்தலுக்குள் பாரிசான் நேஷனலும் பெரிகாத்தான் நேஷனலும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் ஷா ஆலம் அம்னோ இளைஞர் பிரதிநிதிகள் கூட்டத்தில் கூறினார்.
அம்னோ மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பொதுவான நோக்கங்கள் இருப்பதாகவும், அம்னோ மலாய் நலன்களுக்காகவும், பாஸ் இஸ்லாத்திற்காகவும் போராடுவதாகவும், மேலும் இவ்விரு கொள்கைகளும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதாகவும் நோ கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

