கால்வாயில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்!
- Shan Siva
- 10 Oct, 2024
கோத்தா பாரு: , Ketereh, Kampung Pangkal Kalong கில் உள்ள பாசன கால்வாயில் நேற்று குளித்தபோது காணாமல் போன 13 வயது சிறுவனின் உடல் இன்று
கண்டெடுக்கப்பட்டது.
முஹம்மது அகிஃப்
அய்சர் அஸ்ரி பைசல் என்ற அச்சிறுவனின் உடல் காலை 11.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் காணாமல்
போனதாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 150 மீ தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக Ketereh தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தளபதி Hamdam Mamat தெரிவித்தார்.
பின்னர் உடல்
பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவத்தின் போது
பாதிக்கப்பட்ட நபர் மூன்று நண்பர்களுடன் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *