வயலில் முதியவரின் சடலம்!

top-news
FREE WEBSITE AD



அலோர் ஸ்டார், சிம்பாங் எம்பாட்டில் உள்ள  வயலில் 67 வயது முதியவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2.45 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னர், பாதிக்கப்பட்டவரின் மனைவி அவரைக் கண்டுபிடிக்க நண்பரிடம் உதவி கோரியதை அடுத்து, நண்பர் வயலில் இறந்த கிடந்தவரைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் காலை 7.15 மணிக்கு  வயலில் வேலை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிவர், மதியம் 1.30 மணிக்கு மதிய உணவுக்கு வீடு திரும்பவில்லை.

பிற்பகல் 2.45 மணியளவில், வயலில் இறந்து கிடந்தார்" என்று போலீசார் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடலைச் சோதனை செய்ததில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை. 

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *