அதர்வா முரளி படத்திற்கு வந்த சோதனை!

top-news
FREE WEBSITE AD

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான "டிஎன்ஏ"( DNA) திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் இப்போது ஓடிடிக்கு வர இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே சென்றது, இந்த படத்திற்கு முக்கிய பலமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் டப் செய்து நாளை "மை பேபி" என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது.

ஆனால் தெலுங்கு படத்திற்கு தான் இப்போது புது பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஓடிடி அறிவிப்பு இப்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிஎன்ஏ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனால் தெலுங்கு மக்கள் யாரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முன்வர மாட்டார்கள்.

ஏனென்றால் இந்த படம் தியேட்டரில் வெளியாகி 24 மணி நேரத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் படத்தின் தெலுங்கு வசூல் பயங்கரமாக பாதிக்கப்படும். இது பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படம் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. ஆனால் ஓடிடி விஷயத்தை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *