சென்னையில் அமரர் மாஸ்டர் லோகநாதன் முதலாவது நினைவு கோப்பை கராத்தே போட்டி!

top-news
FREE WEBSITE AD

(கே.ஆர். மூர்த்தி)

அலோர்ஸ்டார், ஆக.17-

இந்தியா ஓகினோவா கோஜு ரியோ சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் மாஸ்டர் லோகநாதனின் முதலாவது நினைவு கோப்பை 2025 மிக பிரமாண்டமாக நடைபெற்றதாக கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் கேன்சோ மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தெரிவித்தார்.

மலேசியா ஓகினோவா கோஜு ரியோ சம்மேளனத்தின் தேசிய தலைவருமான மஹாகுரு கே. ஆனந்தனின் மாணவரான அமரர் மாஸ்டர் லோகநாதன் நினைவாக அவரது புதல்வர் ஆனந்தராஜ் லோகநாதன் தலைமையில் இப்போட்டி சென்னை போன் போஸ்கோ பள்ளியில் அமைந்துள்ள பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்ட இதில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள்.




இப்போட்டிக்கு சிறப்பு வருகையாளர்களாக இந்தியா கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் கராத்தே தியாகராஜன், மமுகாவின் துணைச்செயலாளரும் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வரும் மல்லை சத்தியா கலந்துகொண்டார்கள்.

இவர்களோடு மஹாகுரு தொக்கோ கே. ஆனந்தனின் சீனியர் மாணவர்களான மாஸ்டர் ரத்தினம், மாஸ்டர் மாரியப்பன் மற்றும் பல கராத்தே மாஸ்டர்களோடு நம்நாட்டிலிருந்து கேன்சோ மாஸ்டர் எஸ். ஸ்டாலின், பேராக் மாநிலத்தை சேர்ந்த மாஸ்டர் கோஷி காசிநாதன், மாஸ்டர் அல்பட்ட பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மாஸ்டர் கோஷி தியாகராஜன், ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாஸ்டர் கராத்தே தியாகராஜன் அமரர் மாஸ்டர் லோகநாதன் முதலாவது நினைவு கோப்பைக்கான கராத்தே போட்டி மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஏற்பாட்டுக்குகுழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அதோடு இந்தியாவில் வடக்கு முதல் தெற்கு வரை கராத்தே கழகத்தில் பல ஆயிரம் கராத்தே வீரர்களை உருவாக்கி, அவர்களின் மூலமாக அனைத்துலக நிலையில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காரணமாக வித்திட்டுள்ள மஹாகுரு தொக்கோ கே. ஆனந்தனுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

மலேசியா ஓகினோவா கோஜு ரியோ சம்மேளனத்தின் தேசியத் தலைவர் மஹாகுரு கே. ஆனந்தன் ஏற்பாட்டுக்குழு தலைவரான மாஸ்டர் ஆனந்தராஜ் லோகநாதனுக்கு 7-டன் கறுப்பு பட்டையை வழங்கி சிறப்பு செய்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *