மலேசிய பவுலிங் காங்கிரஸைத் தோற்றுவித்த டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 24-

மலேசிய பவுலிங் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் பி.எஸ் நாதன் தனது 90ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.இவரின் மறைவை மலேசிய பவுலிங் காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.

டத்தோ டாக்டர் பி.எஸ் நாதனின் மறைவு பவுலிங் விளையாட்டுத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்று மலேசிய பவுலிங் காங்கிரஸ் தெரிவித்தது.பவுலிங் விளையாட்டுத் துறைக்கு டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார்.





பவுலிங் விளையாட்டுப் போட்டியில் மலேசியா உலகளவில் மிளிர அவர் கடினமாக உழைத்தார்.அவரிடமிருந்து பலர் பவுலிங் பயிற்சியைப் பெற்று இன்று நாட்டைப் பிரதிநிதித்து உலகளவில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

உள்ளூர், உலக அரங்கில் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று மலேசிய பவுலிங் காங்கிரஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.கடந்த 1974ஆம் ஆண்டு டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன் மலேசிய பவுலிங் காங்கிரஸைத் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *