பிரான்ஸ், கனடா அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி டிரா!

top-news

பிரான்ஸ், கனடா அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
ஜெர்மனியில், யூரோ கோப்பை கால்பந்து (ஜூன் 14 - ஜூலை 14) நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடுகின்றன. பிரான்சில் நடந்த போட்டியில் கனடா, பிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 20 நிமிடம் மட்டும் விளையாடினார். இப்போட்டி 0-0 என 'டிரா'வில் முடிந்தது.


இத்தாலியில் நடந்த போட்டியில் இத்தாலி, போஸ்னியா அணிகள் மோதின. டேவிட் பிராட்டேசி (38வது நிமிடம்) கைகொடுக்க இத்தாலி அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்லோவாகியாவில் நடந்த போட்டியில் ஸ்லோவாகியா அணி 4-0 என வேல்ஸ் அணியை வீழ்த்தியது. சொந்த மண்ணில் ஏமாற்றிய மான்டினேக்ரோ அணி 1-3 என ஜார்ஜியாவிடம் தோல்வியடைந்தது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *