கடனில் இருந்து மீண்டு வர உதவிய விஜய் படம் - நெகிழ்ச்சியில் கௌதம் மேனன்!

top-news
FREE WEBSITE AD

கௌதம் மேனன் நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் படம் கடந்த சில ஆண்டுகளாவே ரிலீசுக்கு தயாராகியும் பொருளாதார பிரச்னை காரணமாக முடங்கி கிடக்கிறது. எப்படியாவது அந்த படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவில் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த படம் வெளியாகும் என அவர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், “என்னுடைய நிதிப் பிரச்னைகளை சமாளிக்கவே தான் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.

அப்படியாக நான் பணியாற்றிய படங்களில் விஜய் நடித்த லியோ படம் எனக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய யாரும் எனக்கு கைகொடுக்கவில்லை. துருவ நட்சத்திரம் சென்சார் பிரச்னை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சின்ன பிரச்னை ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு சூர்யாவை ஹீரோவாக கொண்டு துருவ நட்சத்திரம் படம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இப்படம் பல விவகாரங்களால் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்ரம் ஹீரோவாக நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *