திருமண மண்டபத்தின் வாசலில் தந்தையின் பிரேதம் வைக்கப்பட்ட சம்பவம்!

top-news

 தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற இளைய மகன் மறுத்ததால், அவருடைய பிரேதத்தை ஏற்றி வந்த வாகனத்தை மூத்தமகன் மற்றும் உறவினா்கள் திருமண மண்டபம் முன்பு நிறுத்தினா்.

இப்பிரச்னையை மயிலாடுதுறை போலீஸாா் தலையிட்டு தீா்த்து வைத்தனா்.

மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (74). இவருக்கு 3 மகன்கள். முதல்மகன் ரகுராமன் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். கடைசி மகன் சீதாராமன் சகோதரா் ரகுராமனுடன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் ரகுராமனின் தந்தை கணேசன், பேச்சாவடி பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய திருமண மண்டபத்தை கட்டினாராம். பாகப்பிரிவினை செய்து எழுதியபோது, திருமண மண்டபத்தை மனைவி பானுமதி பெயரில் கணேசன் உயில் எழுதி வைத்தாராம்.

ஆனால், அதற்கு உடன்படாமல் திருமண மண்டபத்தை 7 ஆண்டுகளாக ஆக்கிரமித்துக்கொண்ட இளையமகன் சீதாராமன், கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிரிந்து, இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனராம்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கணேசன் வயது முதிா்வால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவா் உயிரிழப்பதற்கு முன்பு தனது உடலை தான் கட்டிய திருமண மண்டபத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என கூறியிருந்தாராம்.

இதனை தந்தையின் இறுதி காரியத்துக்காக வந்த சீதாராமனிடம் கூறியபோது அவரும் ஏற்றுக்கொண்டு இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளாா். பின்னா், வீட்டில் இருந்து கணேசனின் உடலை பிரேதம் ஏற்றும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மண்டபம் முன்பு வந்தபோது, சீதாராமன் மண்டபத்தை பூட்டி வைத்துக்கொண்டு, பிரேதத்தை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கணேசனின் உடலை அவரது மூத்த மகன் ரகுராமன் உள்ளிட்டவா்கள் எடுத்து மண்டபத்தின் வாசலிலேயே வைத்து விட்டு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து மயிலாடுதுறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அரை மணி நேரத்துக்கு மேலாக சீதாராமனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், சீதாராமன் ஏற்றுக்கொண்டதையடுத்து, கணேசனின் உடல் திருமண மண்டபத்தின் வளாகத்தில் அரை மணி நேரம் வைக்கப்பட்டு அதன்பின்னா் தகனத்துக்காக கொண்டு செல்லப்பட்டது.

திருமண மண்டபத்தின் வாசலில் பிரேதம் வைக்கப்பட்ட சம்பவத்தால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *