GISBH விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல! - சைபுதீன் நசுத்தியோன்

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், அக் 15: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட அவுராத் முஹம்மதியா போதனைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறும் அறிக்கைகள் ஆதாரமற்றவை என்றும், விசாரணைகள் வேறுவிதமாக காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில் இருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்களை மட்டுமே தனது அமைச்சு நம்பியிருக்கும் என்று சைபுடீன் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கிறது. எனவே, ஜிஐஎஸ்பிஹெச் மீதான விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல என்று சைபுதீன் கூறினார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 18 நாடுகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் விசாரணைகளை மேற்கொள்வது இலகுவானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை தொடர பரஸ்பர சட்ட உதவி திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளை போலீசார் அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *