மரண தண்டனையில் இருந்து தப்பித்தார் அல்தான் துயா கொலையாளி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, அக் 10: மங்கோலிய அழகியான அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டு முன்னாள் போலீஸ் பணியாளர்களி ஒருவரான அஸிலா ஹத்ரியின் மரண தண்டனை, இன்று 40 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது. இதனிடையே அல்தான் துயாவின் தந்தை ஷாரிபு செதேவ், அஸிலாவின் குற்றத்தை மன்னிப்பதாக நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூன்று பேர் கொண்ட மறுஆய்வுக் குழுவினர், அஸிலாவின் தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும்,48 வயதான அஸிலாவுக்கு 12 பிரம்படி தண்டனை வழங்கவும் உத்தரவிடப்பட்டது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *