எதிர்க்கட்சிக்கு எதிராக சட்டம் பயன்படுத்தப்படுகிறது! - ஹம்சா குற்றச்சாட்டு
- Shan Siva
- 21 Oct, 2026
கோலாலம்பூர், அக் 21: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை ரத்து செய்த சங்கங்களின் பதிவிலாகா முடிவு, எதிர்க்கட்சிக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமாகப் பயன்படுத்தப்படுவதைக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிமன்ற விசாரணைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும், மலாக்கா மாநிலத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு 11 நாட்களுக்கு முன்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்வதற்கான போதுமான காரணங்களை வழங்கத் தவறியதால் அதன் பதிவை ரத்து செய்ததாகச் சங்கங்களின் பதிவிலாகா தெரிவித்துள்ளது.
ஒரே சட்டத்தையும் ஒரே துறையையும் வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துவது ஏன் என்றும் ஹம்சா கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலுக்குத் தயாராகும் என்றும் அவர் தெரிவித்தார். ஆதரவாளர்கள் அமைதி காத்து, சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

