பாஸ் – அம்னோ தலைவர்கள் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்திருக்கலாம்… ஆனால், அதிகாரப்பூர்வமாக இல்லை! - ஜாஹிட் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 24: அம்னோ மற்றும் பாஸ் தலைவர்களுக்கு இடையேயான எந்தவொரு சந்திப்பும் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டதே தவிர, அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளுக்கிடையே அல்ல என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

துணைப் பிரதமராகவும் இருக்கும் ஜாஹிட், பாஸ் உடன் எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்று மறுத்தார், மேலும் பாஸ் கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவர்களும் அவரைச் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

பாஸ் தலைவர்கள் தன்னைச் சந்திக்கவில்லை. ஒருவேளை (ஏதேனும் சந்திப்புகள்) இருந்தால் அவை தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டதே தவிர, முறைப்படி அல்ல என்று துணைப் பிரதமருமான அவர் கூறினார்.

16வது பொதுத் தேர்தலுக்கு (GE16) ஒத்துழைப்பது குறித்து பாஸ் மற்றும் அம்னோ தலைவர்களுக்கு இடையே நடந்த விவாதங்கள் பற்றிய முந்தைய அறிக்கைகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *