சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி – குடும்பங்களுக்கு அமைச்சரவை இரங்கல்

top-news

புத்ராஜெயா, செப். 9 –

சரவாக் மாநிலத்தில் மருத்துவர் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை சரவாக்கின் மருடி, உலு பாராம் பகுதியில் உள்ள லோங் லெல்லாங் குறுகிய ஓடுபாதை விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றது.

ஹெலிகாப்டர் தரையில் விழுந்த பின்னர் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஸ்ரீ பாமி பட்சில் கூறுகையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த துயர சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போது பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது இரங்கலை பதிவு செய்ததாக அவர் கூறினார்.

மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *