மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!
- Muthu Kumar
- 22 Feb, 2026
2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஆன்மீக பாகத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பெயர்ச்சியாக இருக்கிறார். மீனம் உங்களுக்கு 3 ஆம் பாவம். மூன்றாம் பாவம் என்பது இளைய சகோதரர், தைரிய ஸ்தானம். இந்த சனி சகாய சனி என்று அழைக்கப்படுகிறது. சகாயம் என்பது பெயரிலேயே இருக்கிறது. சனி பகவானே உங்களுக்கு உதவி செய்யப் போகிறார். சனி நல்லது கொடுத்தாலும், கெட்டது கொடுத்தாலும் யாராலும் தடுக்க முடியாது.
உங்கள் ராசியாதிபதி சனி பகவான் தான் என்பதால் உங்களுடைய கடவுளே ஈசன் தான். மகர ராசியினர் கடந்த 7 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது. வேலையில் இருந்து துரத்தப்பட்டது, வேலையில் பழி சொல்லுக்கு ஆளானது, துரோகி, எதிரி போன்று சித்தரிக்கப்பட்டிருப்பீர்கள், எல்லா விதத்திலும் பாதிப்பு, உறவுகளில் பகை, நம்பியவர்கள் முதுகில் குத்தியது என பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள்.
பிள்ளைகளால் பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள், நம்பி பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றியிருப்பார்கள், நம்பியவர்கள் முதுகில் குத்தியிருப்பார்கள். உறவுகளில் பகை, பிரச்சனை என பாதிக்கப்பட்டிருப்பீர்கள். பாரபட்சம் இல்லாமல் தண்டனை வழங்கக் கூடியவர் சனி பகவான். உங்கள் ராசியதிபன் இப்போது சகாய சனியாக உங்களுக்கு வருகிறார்.
எல்லா விதத்திலும் சனி பகவான் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வேலையில் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை, காசு, பணம் பிரச்சனை, என எல்லா பஞ்சாயத்துகளும் தீரப் போகிறது. 1 மற்றும் 2க்கு அதிபதியானவர் சனி பகவான். சுய ஸ்தானத்துக்கும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்துக்கும் அதிபதியானவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



