உலோக மூடி இல்லாததால், சாக்கடைக்குள் விழுந்த நபர்!

top-news
FREE WEBSITE AD

கங்கார், அக் 18:

நேற்றிரவு கங்கார் பிந்தாங்கில் உள்ள தாமான் எமாஸ் ஜெயாவில் உள்ள மருந்தகத்திற்கு நடந்து சென்றபோது, மழை நீர் வடிகாலில் விழுந்து ஒருவர் கால் மற்றும் கைகளில் காயம் அடைந்தார்.

பாதிக்கப்பட்ட 37 வயதான அந்த நபர் ஜலான் ராஜா சையத் சஃபியில் நடைபாதையில் நடந்து சென்றபோது இரவு 10.07 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் மருந்தகத்திற்கு விரைந்து கொண்டிருந்தபோது,வடிகாலில் இருந்த உலோக மூடி காணாமல் போனதால் எதிர்பாராதவிதமாக அதனுள் விழுந்தார்.

மீட்புப் படையினர் இரவு 10.13 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவரை வெற்றிகரமாக மீட்டனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துவாங்கு பௌசியா மருத்துவமனைக்கு (HTF) கொண்டு செல்லப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *