ஆற்றில் ரசாயன பீப்பாய்கள்! – போலீஸ் விசாரணை!
- Shan Siva
- 27 Sep, 2024
கோலாலம்பூர், செப் 27: செவ்வாய்கிழமை சுங்கை பூலோ, கம்போங் டேசா அமானில் உள்ள வாய்க்காலில் ரசாயனக் கழிவுகள்
இருப்பதாக சந்தேகிக்கப்படும் எட்டு பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து
போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நீர்ப்பாசனப்
பணிகளில் மாசுவை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 430வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்படுகிறது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
இதற்குக்
காரணமானவர்களை அடையாளம் காண தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
பொருளின்
மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக
உசேன் கூறினார்.
சம்பந்தப்பட்ட ரசாயனக் கழிவுகள்
அம்மோனியா கரைசலாக இருக்கலாம் என்று முதற்கட்ட பகுப்பாய்வு தெரிவிக்கிறது, என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *